வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தனுஷ்… நள்ளிரவில் வெளியானது கேப்டன் மில்லர் டீசர்… வைரல்…!!! - cinefeeds
Connect with us

Uncategorized

வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தனுஷ்… நள்ளிரவில் வெளியானது கேப்டன் மில்லர் டீசர்… வைரல்…!!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். சாணி காகிதம் மற்றும் ராக்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

பீரியட் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். நிவேதிகா சதீஷ் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

 

Advertisement

மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் தனுஷ் வித்தியாசமான லுக்கில் மிரட்டியுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in