ஒரே வாரத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விக்ரம் பட நடிகை.. அடுத்து தமிழ் பிக்பாஸ் தானா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே வாரத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விக்ரம் பட நடிகை.. அடுத்து தமிழ் பிக்பாஸ் தானா?.. செம குஷியில் ரசிகர்கள்..!!!

Published

on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. தமிழ் பிக்பாஸில் இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஏழாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பித்து விட்டது.

அதன்படி இந்த சீசனில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான கிரண் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்த நிலையில் அங்கு தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் குஷியான நிலையில் தெலுங்கு பிக் பாஸ் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் கிரண் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Advertisement

ஒரே வாரத்தில் அவர் எவிக்ட் ஆகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இருந்தாலும் இவர் தமிழ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் இதில் போட்டியாளராக நுழைவார் என தகவல் வெளியாகி உள்ளதால் தமிழ் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா, சீரியல் நடிகை ரித்திகா, மாகாபா, பாவனா, நடிகர் அப்பாஸ் மற்றும் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in