LATEST NEWS
சிறுவர்கள் ஆசப்பட்ட விஷயம்..?”சூரி செய்த நெகிழ்ச்சி சம்பவம்” வைரல் வீடியோ..!!
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி இவர் ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலமாக நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் ,விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி போன்ற பல பிரபல நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் .
அதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘விடுதலை’ படத்தில் இவர் ஹீரோவாக நடித்து புது அவதாரம் எடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதனின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய பெயரிட திரைப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார் நடிகர் சூரி.
இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர் சூட்டிங் சென்ற இடத்தில் அங்குள்ள சிறுவர் சிறுமியர் கேரவனை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார்கள் அவர்களை சந்தித்து சூரி.நடிகர் “சூரியிடம் அண்ணா ஒரே ஒருவாட்டி ப்ளீஸ்” என்று சொல்கிறார்கள்.நடிகர் சூரி உள்ளே இருக்கிறது என்ன என்று கேட்க அதற்கு ஒரு சிறுவன் பெட்ரூம் என்று சொல்கிறான். இதைக்கேட்ட ஷாக்கான சூரி உள்ளே இருக்கிறது மேக்கப் ரூம் என சொல்லி அனைவரையும் உள்ளே சுற்றி காட்டுகிறார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .