Uncategorized
“தங்கலான்” பட இசை வெளியீட்டு விழாவில்….. விக்ரமிடம் மன்னிப்பு கேட்ட பா.ரஞ்சித்…. எதற்காக தெரியுமா…??
தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பா. ரஞ்சித், ஞானவேல் ராஜுடன் படம் பண்ண வேண்டும் என்று முடிவு எடுத்தேன். தங்கலான் படத்தின் பட்ஜெட்டில் சிக்கல் இருந்தது. அப்போது ஞானவேல் ராஜ் மிகவும் உதவியாக இருந்தார் .தம்பியாக உங்களுக்கு வெற்றியை கொடுக்க ஆசைப்படுகிறேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. விக்ரம் என்னுடைய படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அவரை கதாபாத்திரமாக மாற்றுவது மிகவும் சவாலானது. விக்ரமின் இந்த படத்தில் மிகவும் கொடுமைப்படுத்தினேன். மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் பேசிய அவர், விக்ரம் தங்கலானை இன்றும் தூக்கி சுமக்கிறார். என்னை மிகவும் நம்புகிறார். நிச்சயமாக அவருக்கு வெற்றியை கொடுப்பேன் என்று கூறினார்.
மேலும் விக்ரமை மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டே இருப்பேன். சாதாரண மனிதனாக இருந்தால் இந்த படத்தை பண்ண முடியாது. படம் சரியாக வர வேண்டும் என்று நான் மன உளைச்சலுக்கு சென்று விட்டேன். நான் படப்பிடிப்பில் மிகவும் மோசமாக நடந்து கொண்டேன். ஆனால் நீங்கள் மிகவும் ஆதரவாக இருந்தீர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.