Uncategorized
பல உண்மைகளை சொல்றேன் வீடியோ எடு…. ரகசியம் சொன்ன அம்மா…. நடிகை வனிதா பரபரப்பு பேட்டி….!!

நடிகர் விஜயகுமார்க்கும் அவருடைய இரண்டாவது மனைவி மஞ்சுளாவிற்கும் பிறந்தவர்தான் நடிகை வனிதா. இவர் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வருகிறார். தந்தை மட்டும் இன்றி தன்னுடைய தாய் மஞ்சுளாவும் அவருக்கு எதிராக பேசினார். கடந்த 2013 ஆம் வருடம் மஞ்சுளா மரணமடைந்த நிலையில் அவருடைய இறுதி சடங்கில் கூட வனிதாவை கலந்து கொள்ள விடாமல் தந்தை விஜயகுமார் தடுத்தார் .
பின்பு சரத்குமார் ராதாரவி உதவியால் அதில் கலந்துகொண்டார். இந்த நிலையில் தன்னுடைய தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள் குறித்து வனிதா பேசியிருக்கிறார். அம்மாவிற்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்த நிலையில் அப்பொழுது கூட அவருடைய குடிப்பழக்கத்தை விடவில்லை. ஒரு முறை போதையில் மஞ்சுளா பேட்டி கொடுத்ததை உலகமே பார்த்தது என்றும் எழுபது மணி நேரத்தில் இறந்து விடுவேன் என்றும் அந்த தருணத்தில் கடைசியாக அவர் பகிர்ந்த ரகசியத்தையும் கூறி இருக்கிறார்.
அதாவது இந்தியாவிலேயே தலைசிறந்த வழக்கறிஞராக இருக்கும் ஒருவரை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்குமாறு கூறினார். மேலும் தான் சொல்வதை வீடியோவாக எடுத்து என்னுடைய தாய் கூறியதை நான் செய்யாமல் விட்டுவிட்டேன். பின்பு என் தந்தையிடம் வனிதாவை விட்டு விடாதீர்கள் என்று கூறியதாக கூறியுள்ளார். மேலும் தான் பல உண்மைகளை சொல்லப்போகிறேன் அதை வீடியோவாக எடு என்றும் என் அம்மா கூறினார். ஆனால் நான் அதை செய்ய மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார் வனிதா.