வெளிநாட்டவரை திருமணம் செய்யப் போகும் வனிதாவின் மகள்… அம்மாவுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா?.. குழம்பும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டவரை திருமணம் செய்யப் போகும் வனிதாவின் மகள்… அம்மாவுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸா?.. குழம்பும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.

இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள் ஜோவிகாவுடன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு வனிதா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தன்னுடைய மகளுடன் நான் கோவாவிற்கு சென்று கொண்டிருக்கும்போது ஜோவிகா வனிதாவிடம் நான் ஒரு வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார்.

Advertisement

இந்த கேள்வியை கேட்டதும் வனிதா உடனே வண்டியை நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் தனது மகளை பார்த்துள்ளார். மேலும் மகளுக்கு ஒரு காதல் இருந்தால் அதனை தான் ஏற்றுக் கொள்வேன் எனவும் முதல் காதலை திருமணம் செய்து கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். வனிதா இவ்வாறு கூறியிருப்பது அவரின் கடந்த கால நினைவுகளை ஞாபகப்படுத்தியுள்ளது எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in