CINEMA
“என் வாழ்க்கை இப்படி நாசமா போனதுக்கு என் அப்பா தான் காரணம்”.. அவங்கள பழிவாங்கும் செயல்தான் இது… வனிதா பரபரப்பு பேட்டி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார். இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்ததற்கு என்னுடைய அப்பா தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன் என்றால் இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான். என்னுடைய குடும்பத்தில் எனது சகோதரிகள் அனைவரின் பெயரையும் என்னுடைய அப்பா எல்லா இடத்திலும் குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என்னுடைய பெயர் எதிலும் குறிப்பிடப்படுவதில்லை.
சமீபத்தில் ஒரு நபர் எனக்கு ஒரு வீடியோவை அனுப்பினார். அந்த வீடியோவில் அப்பா பிள்ளைகளைப் பற்றி பேசி இருப்பார். ஆனால் அதில் ஒரு வார்த்தை கூட என்னைப் பற்றி எதுவுமே பேசவில்லை. இது எனக்கு பயங்கர கோபத்தை கொடுத்ததால் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால் பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்ததெல்லாம் உண்மைதான் இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் எனது தந்தை எனக்கு சொன்னது எல்லாமே தவறான அறிவுரைகள் தான்.
அதனை நான் புரிந்து கொண்டதால் அவருடைய பேச்சை நான் கேட்கவில்லை. அப்பா சொன்னதை எல்லாம் நான் கடைபிடித்து இருந்தால் என்னுடைய வாழ்க்கை சிதறிப் போய் இருக்கும். தன்னம்பிக்கை தான் தற்போது என்னுடைய பலம். என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் சொல்ல முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்பத் திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழிவாங்குதல். அதற்காகத்தான் நான் அவருடைய பெயரை இதுவரை மாற்றவே இல்லை. அதை நான் எப்போதும் செய்யவே மாட்டேன் என்று வனிதா கூறியுள்ளார்.