LATEST NEWS
இனி பேங்க் மற்றும் இன்சூரன்ஸ் ஆபீஸ்க்கு ஓட வேண்டாம்…! மக்களின் அலைச்சலைக் குறைத்த நிதியமைச்சகத்தின் புதிய டிஜிட்டல் முறை… வெளியான குட் நியூஸ்…!!
பல்வேறு வங்கிக் கணக்குகளில் நீண்ட நாட்களாகக் கோரப்படாமல் தேங்கிக் கிடக்கும் வைப்புத் தொகைகள், முதிர்வடைந்த இன்சூரன்ஸ் க்ளைம்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பங்குகளின் லாபத்தொகை (டிவிடெண்ட்) போன்றவற்றை பொதுமக்கள் ஒரே இடத்தில் எளிதாகத் தேடிக் கண்டறிய புதிய ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய நிதியமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பிஎஸ்பி அலையன்ஸ்’ (PSB Alliance) என்ற பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தை நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் எம்.நாகராஜு முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குரிய அல்லது தங்களின் குடும்பத்தினர் விட்டுச் சென்ற உரிமை கோரப்படாத நிதிச் சொத்துக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இனி ஒவ்வொரு நிதி நிறுவனங்களின் அலுவலகங்களுக்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்திய நிதிச் சந்தையில் சிதறிக்கிடக்கும் நுகர்வோரின் தொகைகளை ஒரே குடையின் கீழ் கண்காணிக்க உதவும் வகையில் ‘www.unclaimedassetsportal.in’ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரி தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறிப்பாக, குடும்பத் தலைவர் இறந்த பிறகு அவர்களின் சேமிப்பு விவரங்கள் தெரியாமல் தவிக்கும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய குடும்பங்கள், எவ்வித இடைத்தரகர்களின் சுரண்டலும் இன்றி தங்களுக்குச் சேர வேண்டிய சட்டப்பூர்வமான தொகையை மொபைல் மூலமாகவே நொடியில் தேடிப் பெற்றுக் கொள்ள இந்தத் தளம் வழிவகை செய்கிறது. இந்த எளிய டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பு எளிய மக்களுக்கான பொருளாதார மேலாண்மை நம்பிக்கையை அதிகரிப்பதோடு, ‘விக்சித் பாரத் 2047’ என்ற வளர்ந்த இந்திய இலக்கை எட்டுவதற்கான ஒரு முக்கியப் படியாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
