அனைவரின் அன்பு, ஆதரவுக்கு நன்றி… கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு..!! - Cinefeeds
Connect with us

CINEMA

அனைவரின் அன்பு, ஆதரவுக்கு நன்றி… கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா போட்ட நெகிழ்ச்சி பதிவு..!!

Published

on

அஜர் பைஜான் பாகு நகரில் சமீபத்தில் நடைபெற்ற பீடே உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரத்யானந்தாவை டைரி ரேக்கரில் 1.5 – 0.5 என்ற புள்ளிகள் கணக்கெட்டில் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல் சென் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அதேசமயம் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 21 ஆண்டுகள் கழித்து இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இரண்டாவது இடம் பிடித்த இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சீனாவில் ஆசிய போட்டி வருகின்ற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக கொல்கத்தாவில் வருகின்ற 30ஆம் தேதி முதல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பிரக்ஞானந்தா பயிற்சி பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பீடே உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற இவருக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.