CINEMA
ஜெயிலர் படத்தில் உடனே அந்த காட்சிகளை நீக்குங்க.. டெல்லி உயர்நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு நேரில் சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். ஜெயிலர் திரைப்படம் தற்போது வரை 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சியை குணச்சித்திர நடிகர்கள் அணிந்து வரும் காட்சியில் பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாக ஒருவர் சில கருத்துக்களை பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களுடைய அணிக்கு களங்கம் ஏற்படும் விதமாக அந்த காட்சி அமைந்துள்ளதால் அணியின் நல்ல பெயரை கெடுக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்சிபி அணி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஜெர்சி அணிந்த காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் என்றும் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பு மற்றும் ஓடிடி தளங்களிலும் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று பட தயாரிப்பாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது