“போன்ல கூட பேச விட மாட்டேங்குறாங்க…” பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் ஜெயம் ரவி! நெஞ்சை உருக்கும் பேட்டி…! – cinefeeds
Connect with us

CINEMA

“போன்ல கூட பேச விட மாட்டேங்குறாங்க…” பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் ஜெயம் ரவி! நெஞ்சை உருக்கும் பேட்டி…!

Published

on

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) தனது குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தைகள் குறித்தான தற்போதைய நிலையை நினைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். “எனக்குக் குழந்தைகள் மீது பாசம் இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய். என் பிள்ளைகள் மீது நான் அளவுகடந்த அன்பு வைத்துள்ளேன்; தினமும் எனது இளைய மகன் என்னுடன் செஸ் விளையாடிவிட்டுத்தான் தூங்குவான்” என்று தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கண் கலங்கினார். மேலும், தனது பிள்ளைகளுக்காகவே தான் இவ்வளவு காலம் அமைதியாக இருந்ததாகவும், ஒரே நாளில் தன்னால் விவாகரத்து பெற்றிருக்க முடியும் என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது தனது குழந்தைகளைத் தன்னை பார்க்க விடுவதே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், பிள்ளைகளைத் தன் கண்ணில் கூட காட்ட மறுப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்குக் கூட பாடிகார்டுகளுடன் (பாதுகாப்பாளர்களுடன்) தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்களுடன் தொலைபேசியில் கூட தொடர்பு கொண்டு பேச முடியாத அளவுக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த அதீத மன உளைச்சல் மற்றும் பிள்ளைகளைப் பார்க்க முடியாத ஏமாற்றத்தின் காரணமாக, விரக்தியில் தனது கையைத் தானே கிழித்துக் கொண்டதாகவும் ரவி மோகன் அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், தனது குடும்ப வாழ்க்கையைக் கெடுப்பதற்கென்றே பின்னணியில் பலர் வேலை பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “இன்று நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால், என்னைப் பிரிந்தவர்கள் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்துக் கட்டிய என் சொந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று தன் தற்போதைய நிலையை ஒப்பிட்டுப் பேசியுள்ளார். பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்கி, தன் சொந்த வீட்டையும் இழந்து நிற்பதாக நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் மத்தியில் கண்ணீருடன் வெளிப்படுத்திய இந்த விஷயங்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in