LATEST NEWS
“இனிமேல் என்னால முடியாது…காட்பாடியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட துரைமுருகன்…திமுக பொதுச்செயலாளர்அவுட்… துரைமுருகனின் உருக்கமான முடிவு… அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்…!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாக முயன்ற திமுக, எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே தோல்வியடைந்திருப்பது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் பலமாக இருந்த கூட்டணியும் தற்போது உடைந்துள்ளது. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சி, விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளது திமுக தலைமைக்குக் கூடுதல் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தற்போது தமிழக அரசியல் களம் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் என்கிற இரு துருவங்களை நோக்கி நகர்ந்துள்ளதால், திமுகவை மறுசீரமைப்பு செய்யத் தலைமை திட்டமிட்டுள்ளது. தவெக அமைச்சரவையில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை உணர்ந்து, திமுகவிலும் இனி 60 வயதிற்கு மேற்பட்டோரை விடுத்து இளைஞர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, கள ஆய்வின் அடிப்படையில் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் விரைவில் அரங்கேற உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திமுகவின் சீனியர் தலைவரும் கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில காலமாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், இம்முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுத் தோல்வியடைந்தார். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகத் துரைமுருகன் முடிவு செய்துள்ளதை அடுத்து, திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராகத் தற்போது பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
