LATEST NEWS
“அச்சச்சோ..!” தேர்வு மைய வாசலில் கதறிய குழந்தை… ஓடிவந்து பெண் போலீஸ் செய்த காரியம்… குவிந்து வரும் பாராட்டு..!!
கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று 3,991 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் தேர்வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர்.
பெங்களூரில் உள்ள ஒரு தேர்வு மையத்திற்கு இளம் தாய் ஒருவர் தனது சிறிய குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு அறைக்குள் குழந்தையை அழைத்துச் செல்ல அனுமதி இல்லாததாலும், தேர்வின் போது குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேறு யாரும் இல்லாததாலும் அந்தத் தாய் செய்வதறியாது கவலையுடன் அங்கு நின்றுகொண்டிருந்தார்.
இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போலீஸார் உடனடியாக உதவ முன்வந்தனர். தேர்வு மைய வளாகத்திலேயே ஒரு சேலையைக் கொண்டு தொட்டில் கட்டி, அழுதுகொண்டிருந்த குழந்தையைப் படுக்க வைத்துத் தாலாட்டினர். பெண் போலீஸாரின் இந்த நெகிழ்ச்சியான செயலை நம்பி, தாயும் நிம்மதியுடன் தேர்வு எழுதச் சென்றார். இவர்களின் இந்த கருணை உள்ளம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
