“நாயை நிறுத்தினாலும் ஜெயிப்போம்”… செருக்கை உடைத்து பாஜகவுக்கு மரண அடி அடித்த பிரசாந்த் கிஷோர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நாயை நிறுத்தினாலும் ஜெயிப்போம்”… செருக்கை உடைத்து பாஜகவுக்கு மரண அடி அடித்த பிரசாந்த் கிஷோர்..!!

Published

on

பங்கிப்பூர் தொகுதியில் ஒரு நாய் அல்லது பூனையை வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜகவே வெற்றிபெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியிருந்தார். 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருமுறை கூட பாஜக தோற்காத தொகுதி என்பதும், பாஜகவின் நிதின் நபின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதி என்பதும் பாஜகவுக்கு வெற்றி உறுதி என்ற எண்ணத்தையே அரசியல் களத்தில் உருவாக்கியிருந்தது.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தகர்த்து 50% வாக்கு வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட இத்தொகுதியில் ஏற்பட்டுள்ள இந்தத் மாற்றம், பீகார் மாநிலத்தில் அரசியல் காற்று தற்போது மாறி வீசத் தொடங்கி இருப்பதற்கான தெளிவான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in