LATEST NEWS
“சிங்கமா இருந்தா என்ன… என் ஏரியாவுல நான் தான் மாஸ்..!” காட்டுக்கே ராஜாவுக்கு மூக்கிலேயே மிதி.. 7 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய ஒற்றைப் பசு.. இணையத்தை ஆக்கிரமிக்கும் அதிரடி வீடியோ..!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம், ராஜுலா தாலுக்காவில் உள்ள காரி கிராமத்தில், இரையைத் தேடி வந்த ஏழு சிங்கங்களின் கூட்டத்தை ஒற்றைப் பசு வீரத்துடன் எதிர்கொண்டு விரட்டியடித்த அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த 7 சிங்கங்கள் அந்தப் பசுவைச் சூழ்ந்து தாக்கவும் முயன்றன. இருப்பினும், சற்றும் அஞ்சாத அந்தப் பசு, தன் துணிச்சலையும் சுறுசுறுப்பையும் வெளிப்படுத்தி சிங்கங்களை நோக்கி எதிர்த்துப் பாய்ந்ததோடு, ஒரு சிங்கத்தின் முகத்திலேயே உதைத்து அவற்றைப் பின்வாங்கச் செய்தது. பசுவின் இந்த அபாரமான தற்காப்புத் தாக்குதலால் மிரண்ட சிங்கக் கூட்டம் அங்கிருந்து தப்பியோடியது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DbkIYoMD_PO/?utm_source=ig_embed&ig_rid=AGuK_BJeF7iCICtwURcoZkj
பசு தன் வீரத்தால் சிங்கங்களிடம் இருந்து தப்பித்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக அதே கிராமத்தில் இருந்த ஒரு கன்றை அந்தச் சிங்கங்கள் வேட்டையாடியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிராம மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். அப்பகுதியில் சிங்கங்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் மற்றும் கால்நடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை உடனடியாகக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனக் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுவின் துணிச்சலைப் பாராட்டும் அதே வேளையில், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
