LATEST NEWS
கழுத்தறுப்பு, முகம் சிதைப்பு…!! கொலையைச் செஞ்சுட்டு அசால்ட்டாக மீன் வறுத்த கொடூரன்… இளம்பெண் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்ணுத்தோப்பு பாலம் அருகே, மண்ணில் அரைகுறையாகப் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலத்தை வடலூர் போலீசார் மீட்டனர். கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப் பெண், வடலூர் ஓ.பி.ஆர் நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பது விசாரணையில் தெரியவந்தது.
அவரது கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், நெய்வேலி காமராஜ் நகரைச் சேர்ந்த சம்பத் என்பவருடன் அவர் கடைசியாகப் பேசியது அம்பலமானது. உடனே களமிறங்கிய காவல்துறையினர், கொலை நடந்த இடத்திற்கு அருகிலேயே எவ்வித பதற்றமும் இன்றி மீன் வறுவல் வியாபாரம் செய்து கொண்டிருந்த சம்பத்தை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், துணிக்கடை நடத்தி வந்த மஞ்சுளாவுடன் தனக்கு மூன்றாண்டுகளாகக் கள்ளக்காதல் இருந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
சென்னையில் உள்ள தனது மகளைப் பார்த்துவிட்டுத் திரும்பிய மஞ்சுளாவை, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலம் அருகே சம்பத் பேசியுள்ளார். அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மஞ்சுளா தொடர்ந்து வற்புறுத்தியதாலும், அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததாலும் ஏற்பட்ட ஆத்திரத்தில், மறைத்து வைத்திருந்த கத்தியால் மஞ்சுளாவின் கழுத்தை அறுத்துக் கொன்றதாகச் சம்பத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் சடலத்தைத் தரதரவென்று இழுத்துச் சென்று மண்ணில் புதைத்து, அதன் மேல் கற்களை வைத்து மறைத்துள்ளார். மஞ்சுளாவின் நகையைப் பறித்துக்கொண்டு, அவரது பையை கடற்கரையில் வீசியுள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை பார்த்து சென்னையில் உள்ள மகள் கொடுத்த தகவலின் பேரில் குடும்பத்தினர் உடலை அடையாளம் காட்டினர். மோட்டார் சைக்கிள் சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் செல்போன் ஆதாரங்கள் மூலம் இரண்டு மணி நேரத்தில் கொலையாளியைக் காவல்துறையினர் கூண்டில் அடைத்துள்ளனர்.
