LATEST NEWS
இந்த மனசு யாருக்கு வரும்… 150 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன்.. யாருக்கு தெரியுமா..??

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுமன். இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரும்பாலும் பல திரைப்படங்களில் வில்லனாகத்தான் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தன்னுடைய 150 ஏக்கர் நிலத்தை நடிகர் சுமன் எழுதி வைத்ததாக இணையத்தில் செய்தி பரவியது. இதனைத் தொடர்ந்து அவரை பலரும் பாராட்டிய நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சுமன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது அந்த தகவல் தவறான ஒன்று, என்னுடைய நிலம் தற்போது கோர்ட் கேஸில் உள்ளது. அது முடிந்ததும் நானே மீடியாவிற்கு அறிவிப்பேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு 150 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு தானமாக கொடுக்க இருப்பதாக சுமன் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் அவர் சொன்னபடி நிலத்தை கொடுக்கவில்லை என்று பேச்சு இருந்த நிலையில் அதன் பிறகு அவர் கொடுத்தாரா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் விழாவிற்காக சுமன் சென்னை வந்திருந்த நிலையில் அப்போது அவரிடம் இந்த நிலம் குறித்து கேட்கப்பட்டபோது, ஆமாம் நான் அந்த நிலத்தை கார்கில் வீரர்களுக்கு கொடுத்து விட்டேன். நாம் நிம்மதியாக இருக்க அவர்கள் தங்கள் உயிரை இழந்து உள்ளார்கள். கார்கில் போரின் போது கார்கில் பண்ட் கலெக்சன் செய்த போது நிறைய நடிகர்கள் ஒரு லட்சம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் என பணம் கொடுத்தனர். ஆனால் என்னுடைய மனைவி 150 ஏக்கர் நிலத்தை கொடுத்து விடலாம் என்று கூறினார். அதனால அந்த நிலத்தை நான் கொடுத்து விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.