அப்பா வேண்டாம்.. முதல் படத்திற்கே டாப் ஹீரோவை அடம் பிடித்து தட்டி தூக்கிய சஞ்சய்… விஜய் மகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அப்பா வேண்டாம்.. முதல் படத்திற்கே டாப் ஹீரோவை அடம் பிடித்து தட்டி தூக்கிய சஞ்சய்… விஜய் மகன் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார். சமீபத்தில் கூட இவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். இயக்குனராக முயற்சி செய்து வரும் சஞ்சய்க்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.

அதேசமயம் தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் இவர் இயக்கம் முதல் படத்தை வைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ள சஞ்சய் லைகா நிறுவனர் சுபாஷ்ரணை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

Advertisement

இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளது கோலிவுட்டிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சஞ்சய் இயக்கம் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் சஞ்சய் இயக்கம் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யை அவரது தந்தை அறிமுகப்படுத்தி அடுத்தடுத்து சில படங்களை அவரே ஹீரோவாக நடிக்க வைத்து உள்ள நிலையில் விஜயின் மகன் சஞ்சய் முதல் படத்திலேயே தந்தையை நடிக்க வைக்காமல் வேறு ஒரு நடிகரை தேர்ந்தெடுத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in