LATEST NEWS
அம்மாடியோ இது மட்டும் இவ்வளவா?.. யூடியூப் மூலம் வனிதாவின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. கேட்டா ஆடிப் போயிருவீங்க..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.
திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார். இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதா youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார். இந்த youtube சேனல் மூலமாக இவரது சம்பளம் குறித்த கேள்வி பலருக்கும் இருந்திருக்கும்.
தற்போது அவர் மாதம் சம்பாதிக்கும் சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வனிதா கூறும் போது, தொடர்ந்து வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம். சரியாக வீடியோக்களை பதிவிடாமல் இருந்தால் 5 ஆயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய் என மாத வருமானம் கிடைக்கும் என வனிதா வெளிப்படையாக கூறியுள்ளார்.