LATEST NEWS
“அந்த பொண்ணுக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தேன்”… பல வருட உண்மையை உடைத்த நடிகர் அப்பாஸ்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர்தான் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் அறியப்பட்ட நடிகர் அப்பாஸ். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவு கண்டனாக வளம் வந்தவர் இவர்தான். 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்கொடுத்த நிலையில் சிறுவயதில் இருந்து இந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்தவர் தான் இவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்குப் பிறகு இதுவரை எந்த படத்திலும் நடிக்காத இவ்வாறு சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் சினிமாவில் இருந்து விலகியது பற்றியும் இந்தியாவை விட்டு வந்தது குறித்தும் கூறி இருந்தார்.
இவர் தற்போது நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் அப்பாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் காதலிகள் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு பெண்ணை 45 நிமிடம் முத்தம் கொடுத்து உள்ளேன். இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போது ஒரு முத்த காட்சியில் நான் நடித்தேன். கிட்டத்தட்ட நான்கு கோணங்களில் அந்த காட்சியை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்த காட்சி போர் அடித்து விட்டது என அப்பாஸ் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.