LATEST NEWS
“பெண்கள் இப்படி செஞ்சா தப்பே இல்ல”.. அந்தக் காலம் வேறு இந்த காலம் வேறு… நடிகை வனிதா ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர்தான் நடிகை வனிதா. இவர் தமிழில் சந்திரலேகா என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பிறகு விவாகரத்து மற்றும் குடும்பத்துடன் பிரச்சனை என அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தார்.
இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்து பெற்ற இவர் தற்போது தனது மகள்களுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வனிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினியை அனைவரும் இனி குடிக்காதீங்க என கேட்டுக்கொண்ட நிலையில் இது தொடர்பாக வனிதாவிடம் கேட்டபோது, குடிப்பது மற்றும் புகை பிடிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நடிகர்கள் போல குழந்தைகள் குடித்தால் அது சமூக சீர்குலைவு என பேசுவார்கள்.
ஆனால் அவை உண்மையல்ல. இன்று காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் நவீன வளர்ச்சிக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. சினிமாவிற்காக இதனை செய்தால் அது ஒன்றும் தவறு இல்லை என்று வனிதா வெளிப்படையாக பேசியுள்ள நிலையில் இதனைப் பார்த்த இணையவாசிகள் என்ன காலம் மாறினாலும் தமிழர்களின் கலாச்சாரம் மாறக்கூடாது என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.