Uncategorized
அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது…. நல்லவேளை கல்யாணம் நடக்கல…. ஷீத்தல் பரபரப்பு பேட்டி…!!
சின்னத்திரை, வெள்ளித்திரை என்று கலக்கி வந்தவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவதாக ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல பேட்டிகளில் முகம் சுளிக்கும் விதமாக இருவரும் நடந்து கொண்டார்கள். பெட்டியில் பேசிய பப்லு, ஷீத்தல் என்ற அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்துள்ளேன். நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங்க் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
தற்போது இருவருமே பிரிந்து விட்டார்கள். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஷீத்தல் எங்களுக்குள் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயமே இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என்று நினைத்து பிரிந்து விட்டோம். அது மட்டுமில்லாமல் காதலிக்கும் பொழுது அவர் கொடுத்த அனைத்து பொருட்களையும் நான் திருப்பி கொடுத்துவிட்டேன்.
நல்லவேளை எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை. அதுவரை சந்தோஷம். ஏனென்றால் திருமணம் நடந்திருந்தால் அது இரு வீட்டாரையும் பாதிக்கும் .அதை நினைத்து நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அவரோடு லிவிங்கில் இருக்கும் பொழுது திருமணத்திற்கும் காதலுக்கும் வயது ஒரு பிரச்சினையே கிடையாது என்று சொல்லி இருந்தேன். அதைத்தான் இப்பொழுதும் சொல்கிறேன். ஒருவர் மீது காதல் வருவதற்கு வயது ஒரு காரணம் கிடையாது. சில காரணங்களை வெளியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது வெளியில் தெரியாமல் இருப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.