LATEST NEWS
எனக்கு 25 வயது பெண்ணுடன் திருமணம்….! முதன்முதலாக மனம் திறந்த பப்லு அவரே சொன்ன தகவல்….!!!
நடிகர் பப்லு 25 வயது இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவலுக்கு நடிகர் பப்லு விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரத்திலும், நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பப்லு. இவர் சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார், சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்து வருகிறார். இவர் படங்களில் வில்லனாக நடித்தாலும் ரியல் லைஃப் யில் ஹீரோதான். தன்னுடைய ஆட்டிசம் குறைபாடு உள்ள மகனை இவர்தான் வளர்த்து வருகிறார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 25 வயது மகனை இவர்தான் பார்த்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தனது ஆரோக்கியத்திற்கு தன்னுடைய மனைவிதான் காரணம் என்று ஒரு இளம் பெண்ணை அறிமுகப்படுத்தினார்.
அவருக்கு 25 வயது தான் இருக்கும் இதை பார்த்த பலரும் பப்லு இரண்டாவதாக 25 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்று செய்தி வெளியானது. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அவர் கூறியதாவது நான் ஒரு பெண்ணை காதலிப்பது உண்மைதான், ஆனால் அவருடன் திருமணம் செய்து கொள்வேன். அதை நான் திருட்டுத்தனமாக செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார் .
