இனி பேரன்பு சீரியலில் இவருக்கு பதில் இவர்….! மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகை….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனி பேரன்பு சீரியலில் இவருக்கு பதில் இவர்….! மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை நடிகை….!!!

Published

on

நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சீரியலில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் சமீப காலத்தில் சர்ச்சையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீநிதி. அஜித்தின் வலிமை படத்தை பற்றி பேசி சிக்கிக்கொண்ட இவர் ,அதன் பிறகு நடிகர் சிம்புவை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது பெயர் சோசியல் மீடியாவில் பயங்கரமாக டேமேஜ் ஆனது.

இதைத் தொடர்ந்து இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து நல்ல நிலைமைக்கு திரும்பியுள்ளார். சமீப காலமாக சின்னத்திரையில் ஸ்ரீநிதி விவகாரம் தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வந்தது. அது மட்டும் இல்லாமல் நடிகை நக்ஷசத்ரா வின் திருமணம் குறித்தும் சில விஷயங்களை பேசி இருந்தார் . இதற்கு நக்ஷத்திரா  மறுப்பு தெரிவித்திருந்தார்.

Advertisement

தற்போது சிகிச்சை எல்லாம் முடிந்து வந்த இவர் தான் பேசிய அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பேரன்பு சீரியலில் வானதியின் தங்கையாக  ஆர்தி ரோலில் ஸ்ரீநிதி  நடிக்க உள்ளார் .இதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை அக்ஷிதா விலகிய நிலையில் தற்போது ஸ்ரீநிதி ஆர்த்தியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in