LATEST NEWS
பிரபல டிவி சீரியலில் களமிறங்கும் விஜய் சேதுபதி…. வைரலாகும் வீடியோவை பார்த்து குஷியான ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சமீப காலமாக வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழ் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் விஜய் சேதுபதி வருகிறார். அந்த சீரியல் குறித்து வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஹீரோ தனது மனைவியை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதியிடம் இருந்து போன் கால் வருகிறது. அவர் தனது ரசிகர்களை அனுப்பி அவருக்கு உதவி செய்ய வைப்பது போல அதில் காட்டப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி சீரியலுக்கும் வந்து விட்டாரா என ஆச்சரியமடைந்துள்ளனர்.
https://twitter.com/ZeeTamil/status/1618209022276141058
