LATEST NEWS
ராஜா ராணி சீரியல் நடிகருக்கு நடந்த சோகம்…. போலீஸ் கம்ப்ளைன்ட்….. பரபரப்பு சம்பவம்….!!!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி சீசன் 2.இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த தியா அவுர் பாதி ஹம் என்ற சீரியலின் ரீமேக் ஆகும். பிரவீன் பென்னெட் இந்த சீரியலை இயக்க குளோபல் வில்லேஜஸ் தயாரித்து வருகின்றது .முதலில் இந்த சீரியலில் சித்து மற்றும் ஆலியா மானசா ஜோடியாக நடித்து வந்தனர். அதன்பிறகு ஆலியா மானசா கர்ப்பமானதால் தற்போது ரியா என்பவர் சந்தியாவாக நடித்து வருகிறார்.அவரது நீண்ட நாள் கனவான போலீஸ் ஆவதற்கான டிராக்டர் தற்போது ஓடிக் கொண்டுள்ளது.
இந்த ராஜா ராணி தொடரில் உள்ளே புதிய நடிகர்களும் தற்போது இணைந்துள்ளனர். அந்த வகையில் இந்த தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் லோகேஷ் பாஸ்கரன் என்பவரின் காரின் பின்னால் உடைத்து அவருடன் பயணித்த ஆமோட் என்பவரின் 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி உள்ளார்களாம். அதனை கண்டுபிடித்து தருமாறு லோகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
