CINEMA
54 வயசுல அந்த விஷயம் தேவைப்படுதா…? அசிங்கமா பேசியதால் அந்த முடிவை எடுத்தேன் – பப்லு…!!
சின்னத்திரை, வெள்ளித்திரை என்று கலக்கி வந்தவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் சில மாதங்களுக்கு முன்பாக இரண்டாவதாக ஷீத்தல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல பேட்டிகளில் முகம் சுளிக்கும் விதமாக இருவரும் நடந்து கொண்டார்கள். பெட்டியில் பேசிய பப்லு, ஷீத்தல் என்ற அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்துள்ளேன். நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங்க் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
தற்போது இருவருமே பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் சமீபத்தில் பேசிய பப்லு பிரித்விராஜ், ஷீத்தல் எனக்கு அறிமுகமான சமயத்தில் அவருக்கு 24 வயது. எனக்கு 55 வயது இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். காதலித்தோம். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் இருந்ததால் என்ன மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள். ஆனால் நான் அதற்காக வாங்கிய திட்டுக்கள் ஏராளம்.
55 வயதான உனக்கு 24 வயது பெண்ணா? என்று சொல்லி என்னை வறுத்தெடுத்தார்கள். இந்த வயதில் அந்த விஷயம் தேவைப்படுகிறதா? என்று மோசமாகவும் பேசினார்கள். ஒரு கட்டத்தில் நமக்கெல்லாம் இது தேவையா? என்ற எண்ணம் வந்துவிட்டது. தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.