CINEMA
விஜய்யின் கட்சிப் பாடலை கம்போஸ் செய்தது இவரா…? இது முதல்முறையாமே…. லீக்கான தகவல்…!!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை தொடங்கிய போதிலும் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் தான் தங்களது இலக்கு என்று அறிவித்திருந்தார். இதனையடுத்து நேற்று பனையூரில் உள்ள அவருடைய கட்சி அலுவலகத்தில் கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகரும், அக்கட்சியின் தலைவரும் ஆன விஜய் கொடியேற்றினார்.
மேலும் கொடி அறிமுக விழாவில் கட்சி பாடலையும் வெளியிட்டார். இந்த நிலையில் விஜய் கட்சிக்கு அந்த பாடலை இசை அமைத்தது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .அந்த பாடலை இசையமைப்பாளர் தமன் தான் கம்போஸ் செய்துள்ளதாகவும் பாடல் ஆசிரியர் விவேக் அதன் வரிகளை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தமன் இப்படி அரசியல் கட்சிக்கு முதன்முதலாக கம்போஸ் செய்வது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.