CINEMA
பேசுற வாய் பேசிக்கிட்டே தான் இருக்கும்…. நாம காதை மூடிக்கணும்…. யுவன் சங்கர் ராஜா அட்வைஸ்..!!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த படங்கள் தோல்வி அடைந்ததால் என்னை ஃபெயிலியர் கம்போசர் என்று முத்திரை குத்தி விட்டார்கள். அதற்காக நான் அழுது இருக்கிறேன். சில நாட்களுக்கு பின் என் செயலில் அதிக கவனம் செலுத்த தொடங்கினேன்.
அதனால்தான் இப்பொழுது உங்கள் முன் நிற்கிறேன். நம்ம நடந்து போய்க்கிட்டே இருக்கணும். எதையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது. நீங்கள் எப்பொழுதும் தலைநிமிர்ந்து பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய காதுகள் எப்போதும் நெகட்டிவிட்டிக்கு மூடி இருக்கும். இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு திறந்திருக்கும் என்று பேசி இருக்கிறார்.