CINEMA
வைரல் வீடியோ: இன்று மாலை 5 மணிக்கு டிரெய்லர்…. அதுக்கு முன்னாடியே எதிர்பார்ப்பை எகிற வைக்கும் “GOAT”…!!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே, யுவன் சங்கர் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், டிரெய்லருக்கு முன்னோட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு GOAT படக்குழு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Need Trailer Celebration For #GOATTrailer Tomorrow pic.twitter.com/FFCMZ9uTYQ
— CB (@Cringedboy__) August 16, 2024