CINEMA
விடாமுயற்சி படம் பார்த்த அஜித்…. சட்டென சொன்ன அந்த வார்த்தை…. என்ன தெரியுமா…??
நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க தொடங்கி விடுவார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும். படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் அஜித்துக்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டுள்ளது. அப்போது படத்தை மிகவும் உன்னிப்பாக பார்த்த அஜித், திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருகிறதே என்று கூறி இயக்குநர் மகிழ் திருமேனியை கட்டிப்பிடித்து பாராட்டியதாக படப்பிடிப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.