CINEMA
‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு தேசிய விருது: நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு…!!
முதல் முறையாக தேசிய விருது பெற்றதால், தான் மிகவும் மகிழ்ச்சியாக நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார். எந்த ஒரு சாதனையும் தனிப்பட்ட நபருக்கானது அல்ல. இந்த தேசிய விருது திருச்சிற்றம்பலம் படத்திற்கு தங்களுடைய உழைப்பை கொடுத்தவர்கள். சோபனா மீது அன்பைப் பொழிந்தவர்கள் என அனைவருக்கும் ஆனது . சோபனா என்ற ஒளியின் முகமாக இருப்பதற்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.
தேசிய விருது பெற ஆச்சரியமான படங்களை செய்ய வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து, ஒரு சிம்பிளான படத்துக்கு, உண்மையான விருது கிடைத்துள்ளதாக என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனுஷ், நித்யா மேனன் கூட்டணியில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.