சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்பு அல்ல… நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு…!! - cinefeeds
Connect with us

CINEMA

சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்பு அல்ல… நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு…!!

Published

on

திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது திருச்சிற்றம்பலம் படத்திற்காக என்னுடைய முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையாக தெரியும் நடிப்பிற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானது அல்ல என்று புரிந்து கொண்ட தேசிய விருது குழுவிற்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்பு அதிகரிப்போ செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது .

அதன் நடிப்பின் ஒரு பகுதி தானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சி செய்து வருகிறேன். தனுஷ், பிரகாஸ்ராஜ், பாரதிராஜா ஆகிய எங்கள் நான்கு பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து பண்ணலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement