CINEMA
மூன்று நாட்களில் உலகளவில் 53 கோடி வசூல் வேட்டை…. தங்கலான் படக்குழு அறிவிப்பு…!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருப்பினும் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஒரு ரோலில் விக்ரம் தவிர வேறு எவராலும் நடிக்கவே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் .அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ‘தங்கலான்’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆக.15ஆம் தேதி வெளியான இந்தப்படம் மூன்று நாட்களில் உலகளவில் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சர்வதேச வசூல் தொடர்பாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சார்பாக சிறப்பு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.