CINEMA
அந்த ரெண்டு பெரும் ரொம்பவே ஸ்பெஷல்…. திருச்சிற்றம்பலம் படம் குறித்து பேசிய தனுஷ்…!!
இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹர் எழுதி இயக்கிய திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் நித்யா மேனன் , பாரதிராஜா , பிரகாஷ் ராஜ் , ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் டத்தில் தனுஷ் ஒரு டெலிவரி மேன்.
இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய தனுஷ், ஒரு படத்தில் நடித்த ஹீரோ ,ஹீரோயின் ஒரே சமயத்தில் சிறந்த நடிகர் ஆக விருது பெறுவது என்பது அரிது . திருவும் சோபனாவும் ரொம்பவே ஸ்பெஷல். திருவை நன்றாக காண்பித்த சோபனாவுக்கு நன்றி என்று தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .