CINEMA
விக்ரமை பார்த்து அந்த கேள்வி கேட்ட பத்திரிகையாளர்…. நறுக்குன்னு சொன்ன பதில் என்ன தெரியுமா…??
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது. படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விக்ரமிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு ஏன் அஜித், சூர்யா போன்ற அளவிற்கு ரசிகர்கள் இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு பதில் அளித்த விக்ரம், என்னுடைய ரசிகர் பட்டாளத்தை பற்றி உங்களுக்கு தெரியவில்லை. படம் ரிலீஸ் ஆகும் போது வந்து தியேட்டரில் பாருங்கள். அனைத்து மக்களும் ஏதோ ஒரு வகையில் என்னுடைய ரசிகர்கள் தான் என்று கூறியுள்ளார்.