CINEMA
Black கோட், கூலிங் கிளாஸ்…. “தங்கலான்” பார்க்க மாஸாக வந்த சியான் விக்ரம்…. கொண்டாடிய ரசிகர்கள்…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏராளமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்த நிலையில் இன்று விக்ரம் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் தங்கலான் படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு வந்திருந்தார். கறுப்பு கலர் கோட், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு செம மாஸாக வந்திருந்தார். அவர் வருகையை ரசிகர்கள் மேள தாளத்தோடு வரவேற்று கொண்டாடினார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.