CINEMA
அவனை செருப்பால் அடிக்க வேண்டும்…. பத்திரிகையாளர் சந்திப்பில் கொந்தளித்த நடிகர் விஷால்…!!
செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த நடிகர் விஷால், மலையாள திரைத்துறையில் நடந்திருப்பது மிகப்பெரிய தவறு என வேதனையை வெளிப்படுத்தினார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், நடிகைகளிடம் தவறாக நடந்துகொண்ட அனைவருக்கும் உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
யாரவது தவறாக நடந்துகொள்வதற்கு முயற்சி செய்தால், அந்தப் பெண்மணி அவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், பாலியல் தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.