CINEMA
இன்னும் 3 நாட்களே…!அடுத்த பாடல் வெளியீடு…. தியேட்டரை அதிர வைக்க காத்திருக்கும் தங்கலான்….!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். நடிகை மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் உள்ளன நிலையில் பட குழு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது படத்தின் அடுத்த பாடலான அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விக்ரம் பாடி உள்ளார். பண்ணையாரின் நிலத்தில் அறுவடை செய்து கொண்டே அவரவர் காதையை பார்த்து பாடக்கூடிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படம் குறித்த எதிர்பார்ப்பும் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.