CINEMA
செம எதிர்பார்ப்பில் தளபதி ரசிகர்கள்…! GOAT திரைப்படத்தின் டிரைலர் அப்டேட் இன்று வெளியாகிறது…!!
நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்று திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் படம் குறித்து தினமும் ஒரு அப்டேட் வந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் நேற்று தெரிவித்துள்ளார். இதனால் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இன்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.