CINEMA
“அந்த கண்ண பாத்தா” விஜய் தான் எப்போதும் எனக்கு பிடித்தவர்…. மாளவிகா மோகனன் பளீச் பதில்…!!
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பேட்ட என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட்டானதால் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறார்.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்த்தி என்ற படத்தில் இவர் நடிக்கிறார் . இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து கொண்டிருந்த இவரிடம் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்? என்று ஒருவர் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார் .அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் எனக்கு பிடித்த நடிகர் எப்பொழுதுமே தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார்.