தனது வீட்டை இடிக்க முடிவெடுத்த தளபதி விஜய்… என்ன காரணம் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது வீட்டை இடிக்க முடிவெடுத்த தளபதி விஜய்… என்ன காரணம் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Published

on

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வசித்து வரும் நிலையில், அவரது கட்சி அலுவலகம் திருவான்மியூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய் தனது பழைய வீட்டை இடிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ஆரம்ப காலத்தில் தங்கியிருந்த சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டைத்தான் தற்போது இடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த வீட்டை முழுமையாக இடித்துவிட்டு, அங்கு ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு (Apartment) கட்ட விஜய் மற்றும் அவரது தந்தை இருவரும் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.

Advertisement

இந்த வீட்டில் தான் இதற்கு முன்பாக நடிகர் விஜய் ஆண்டனியின் ஸ்டூடியோவும், எஸ்.ஏ. சந்திரசேகரின் அலுவலகமும் இயங்கி வந்தன. தற்போது அவர்கள் இருவரும் அங்கிருந்து காலி செய்துவிட்ட நிலையில், அந்த இடத்தை வணிக ரீதியாகவோ அல்லது பெரிய குடியிருப்பாகவோ மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. விஜய்யின் இந்தத் திடீர் முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in