CINEMA
தளபதி விஜய் இன்று நடிகர்…. நாளை தமிழக முதல்வர்…. பிரபல நடிகர் நம்பிக்கை…!!

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்துவிட்டார். இதற்கு பல விதமான விமர்சனங்களும், ஆதரவும் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் அரசியலில் பெரிய அளவில் சாதிப்பார் என்று நடிகர் பெஞ்சமின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு குழந்தைகளுடைய மனதில் இடம் பிடித்த ஒரே நடிகர் விஜய் தான் என்றும், சினிமாவில் அவர் சாதித்ததை போலவே அரசியலிலும் அவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் ஒரு முடிவெடுத்தால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் என்ற அவர், நிச்சயம் அவர் முதல்வர் ஆவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.