LATEST NEWS
“சீரியல் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!” சன் டிவியில் பழைய சீரியல்களுக்கு டாடா… புதிய சீரியல் வருகை…!
சன் டிவி தனது நேயர்களைக் கவர்வதற்காகத் தொடர்ந்து புதிய கதையம்சம் கொண்ட சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ‘புனிதா’ மற்றும் ‘மணமகளே வா’ ஆகிய தொடர்கள் விரைவில் நிறைவடைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், சன் டிவியில் புத்தம் புதிய சீரியல் ஒன்று விரைவில் வரவுள்ளது. வருகிற மே மாதம் சன் டிவியில் துளசி என்கிற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.இந்த சீரியலில் அருண் குமார் ஹீரோவாகவும், ஷ்ராவ்னிதா ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். விரைவில் இந்த சீரியலின் அறிவிப்பு வீடியோ வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஜூன் மாதத்துடன் ‘ஆடுகளம்’ சீரியல் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குப் பதிலாக ஒரு மெகா தொடர் தயாராகி வருகிறது. இந்தப் புதிய சீரியலில் சின்னத்திரையின் பிரபலமான நடிகர், நடிகைகள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும், இது ஒரு குடும்பப் பாங்கான அதேசமயம் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ‘சிங்கப்பெண்ணே’, ‘மூன்று முடிச்சு’ போன்ற தொடர்களின் மகா சங்கமம் நடந்து முடிந்த நிலையில், புதிய சீரியல்களின் வருகை ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இந்தத் தொடரும் சன் டிவியின் டிஆர்பி (TRP) ரேட்டிங்கை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ப்ரமோ வீடியோக்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
