CINEMA
“இனியும் பொறுக்க முடியாது… தலை மேல் ஏறி மிதித்துவிடுவார்கள்!” மகளுக்காக ஆவேசமடைந்த நடிகை குஷ்பு.. கொடுத்த அதிரடி பதிலடி..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு, கடந்த ஜூன் 25-ம் தேதி தனது மூத்த மகள் அவந்திகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்தில் பழம்பெரும் நடிகர் பாக்யராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். எனினும், திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் நடிகர் பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில், குஷ்பு தொடர்ந்து தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்ததால், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.
தொடர்ந்து தனது குடும்பத்தின் மீதும், பிள்ளைகள் மீதும் சமூக வலைத்தளங்களில் வைக்கப்பட்டு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கேலிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஷ்பு தற்போது ஆவேசமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களின் இந்த நிலைக்கு வர தங்களது இரத்தமும் வியர்வையும் சிந்தி, எலும்புகள் தேய உழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது பிள்ளைகளை ஒருபோதும் ‘பிரபலங்களின் பிள்ளைகள்’ என்ற கர்வத்தோடு வளர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குறிப்பாக, தங்களது இரண்டு நிமிட மலிவான விளம்பரத்திற்காகவும், பணத்திற்காகவும் தங்களைப் பற்றி அவதூறாகப் பேசும் யூடியூபர்களுக்கு அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளைகள் அவமதிக்கப்படுவதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், தனது குட்டிகளைக் காப்பாற்ற பாயும் காயம்பட்ட புலி தான் ஒரு தாய் என்றும் அவர் சாடியுள்ளார். இப்போது குரல் கொடுக்காவிட்டால் முட்டாள்கள் தலைமேல் ஏறி மிதித்துவிடுவார்கள் என்று கூறியுள்ள குஷ்பு, அனைத்துப் பெண்களும் தங்களுக்காக எழுந்து நிற்க வேண்டும் என்றும், தனக்கு ஆதரவாக இருக்கும் ராதிகா சரத்குமாருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
