CINEMA
தங்கலான்-2 குறித்த அறிவிப்பு கொடுத்த நடிகர் விக்ரம்…. ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்..!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருப்பினும் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஒரு ரோலில் விக்ரம் தவிர வேறு எவராலும் நடிக்கவே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் .அவ்வளவு ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தங்கலான் படத்தின் வெற்றி விழாவானது நேற்று இரவு நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய விக்ரம் தங்கலான் இரண்டாம் பாகத்தை அறிவித்துள்ளார். தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருப்பதால் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தங்கலான் அடுத்த பாகம் விரைவில் எடுக்க ஆசைப்படுவதாக கூறியிருக்கிறார் என்று மேடையில் தெரிவித்துள்ளார்.