நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும்.. அந்தப் புகைப்படத்தை தூசி தட்டி எடுத்த சமந்தா.. பதிவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நாக சைதன்யாவுடன் நெருக்கமாக இருக்கும்.. அந்தப் புகைப்படத்தை தூசி தட்டி எடுத்த சமந்தா.. பதிவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

Published

on

தெலுங்கு திரை உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நாக சைதன்யா. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நாகசெய்தன்யாவின் ஜோடியாக நடித்த திரை உலகில் களம் இறங்கியவர் தான் பிரபல நடிகையான சமந்தா. அந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாகச் சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் சினிமாவில் தற்போது பிசியாக நடித்த வரும் நிலையில் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா உடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் லீக் ஆனது. அதனால் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின.

Advertisement

இந்த நிலையில் நடிகை சமந்தா சைலன்டாக தற்போது ஒரு வேலையை பார்த்துள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் மறைத்து வைத்திருந்த முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் புகைப்படம் ஒன்றை தற்போது மீண்டும் அன் ஆர்சிவ் செய்துள்ளார். அந்தப் பதிவு நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தா போட்ட பதிவுதான். அதில் சமந்தா தனது முன்னாள் கணவருக்கு முத்தம் கொடுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்த அந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் திரும்ப டைம் லைனுக்கு சமந்தா கொண்டு வந்துள்ள நிலையில் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்களா என்று ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in