LATEST NEWS
முக்கிய பிரபலத்துடன் காதல் வலையில் திரிஷா.. 40 வயதில் டும் டும்?.. மாப்பிள்ளை யார் தெரியுமா..??

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் என இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களை திரை உலகில் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களுடனும் உச்ச நடிகையாக சற்றும் இடைவெளி விடாமல் 24 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அதில் இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இறுதியாக த்ரிஷா நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவரை சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் தற்போது விஜயுடன் ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீப காலமாக த்ரிஷாவின் காதல் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் 40 வயதாகும் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவருடன் திரிஷாவுக்கு காதல் இருப்பதாகவும் இருந்தாலும் அவரது பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் தெரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது குறித்த அறிவிப்பை திரிஷா விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.