CINEMA
இளையராஜாவிடம் அவமானப்பட்ட லிவிங்ஸ்டன், நேரில் பார்த்தவுடன் இயக்குனர் கே பாக்யராஜ் செய்த தரமான சம்பவம் – அவரே சொன்ன தகவல்தான் இது!
நடிகர் லிவிங்ஸ்டன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் லிவிங்ஸ்டன் கூறியதாவது, பாடகர் வாய்ப்பு கேட்டு ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளையராஜாவிடம் சென்றேன். அப்போது அங்கு இருந்தவர்கள் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டனர்.
இதனால் மனம் நொந்து போய் அங்கு ஓரமாய் நின்று நான் அழுதுகொண்டு இருந்தேன். அப்போது என்னை பார்த்து பரிதாபப்பட்ட இயக்குனர் கே பாக்யராஜ் அவருக்கு உதவியாளராக எனக்கு வாய்ப்பு கொடுத்து மறுநாளே என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார் என்று நடிகர் லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.
