பாக்யராஜை எதுக்கு உங்க கலையுலக வாரிசுன்னு அறிவிச்சீங்க? முதல்வரிடம் கேள்வி கேட்ட இன்றைய சட்டசபை சபாநாயகர் – அதற்கு எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? – cinefeeds
Connect with us

CINEMA

பாக்யராஜை எதுக்கு உங்க கலையுலக வாரிசுன்னு அறிவிச்சீங்க? முதல்வரிடம் கேள்வி கேட்ட இன்றைய சட்டசபை சபாநாயகர் – அதற்கு எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

Published

on

MGR

இன்றைய தவெக ஆட்சியமைத்துள்ள சட்டசபையில் சபாநாயகராக இருப்பவர் ஜேடிசி பிரபாகர். இவர் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவில் மிக முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். எனக்கு மகள் இருந்திருந்தால் நீதான் எனக்கு மாப்பிள்ளை என்று எம்ஜிஆரே ஒருமுறை அவரிடம் கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் அன்பை பெற்றவர் ஜேடிசி பிரபாகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக சட்டசபை சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் கூறியிருப்பதாவது, எம்ஜிஆர் பாக்யராஜை தனது கலையுலக வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள் இராமாவரம் தோட்டத்துக்கு நான் நேரில் சென்றேன். பாக்யராஜை ஏன் இப்படி அறிவித்தீர்கள்? என்று எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். என்னை காரில் அமர வைத்து இராமாவரத்தில் இருந்து தலைமை செயலகம் வரை, நான் ஏன் பாக்யராஜை என்னுடைய கலையுலக வாரிசாக அறிவித்தேன் என்பதற்கான காரணங்களை எம்ஜிஆர் என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். பின்பு நான் அவரது அந்த முடிவு சரிதான் என்று எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன் என்று ஜேடிசி பிரபாகர் கூறியிருக்கிறார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in